LOGIN
dinamalar telegram
Advertisement

சூரிய சந்திர வாகனத்தில் மலையப்பசுவாமி

Share


திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் ஏழாம் நாளான இன்று காலையில் சூரிய பிரபை வாகனத்திலும் இரவு சந்திர பிரபை வாகனத்திலும் உற்சவரான மலையப்பசுவாமி எழுந்தருளினார்.

கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதியின்றி கோயில் வளாகத்தினுள் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் எழுந்தருளுகிறார்.

கோவில் முக்கிய அதிகாரிகளும்,அர்ச்சகர்களும் மட்டும் விழாவில் கலந்து கொள்கின்றனர்.நேற்று ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில முதல்வர்கள் இருவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நாளை எட்டாம் நாளான்று காலையில் தேரோட்டமும் இரவில் குதிரை வாகனத்தில் சுவாமி உலாவும் வழக்கமாக நடைபெறும். இந்த வருடம் தேரோட்டத்திற்கு பதிலாக கோவிலுக்குள்ளேயே வாகன உலா நடைபெறும்.

நாளை மறுநாளோடு பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

-எல்.முருகராஜ்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement