LOGIN
dinamalar telegram
Advertisement

திருப்பதி பிரம்மோற்சவத்தில் கல்கி அவதாரம்

Share




திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் எட்டாவது நாளான இன்று இரவு உற்சவரான மலையப்பசுவாமி குதிரை வாகனத்தில் கல்கி அவதாரத்தில் எழுந்தருளினார்.

திருமலையில் நடக்கும் விழாக்களிலேயே மிக விசேஷமான விழாவான பிரம்மோற்சவ விழா நடந்துவருகிறது.பக்தர்கள் கூடினால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர் என்பதால் பக்தர்களுக்கு அனுமதியின்றி கோவிலுக்குள் அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் முன்னிலையில் விழாக்கள் நடந்துவருகிறது.நடக்கும் விழாக்கள் நேரடியாக திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

எட்டாவது நாளான இன்று காலை மாடவீதிகளில் தேரோட்டம் நடைபெறும் ஆனால் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக சர்வபூபாள வாகன உலா கோவிலுக்குள் நடத்தப்பட்டது.இரவு குதிரை வாகனத்தில் கல்கி அவதாரத்தில் வந்தருளினார்.உலகில் உள்ள தீய சக்திகளை அழிக்க பகவான் எடுக்கவிருக்கும் அவதாரம்தான் கல்கி அவதாரம்.

நாளையுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

-எல்.முருகராஜ்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement