'ஸ்டாலினால் முதல்வராக முடியலியே!'
நாகை மாவட்டம், திருக்குவளையில் உள்ள, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த இல்லத்திற்கு, தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு, சமீபத்தில் சென்றார். அங்குள்ள கருணாநிதி மற்றும் அவரது பெற்றோர் சிலைகளுக்கு, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.பின், அவர் கூறுகையில், 'எம்.ஜி.ஆர்., இருந்தபோது, அ.தி.மு.க., இருந்தது. அதற்குப்பின் தேய்ந்து, தற்போது அந்தக் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது. வரும் தேர்தலுக்குப் பின், அக்கட்சி காணாமல் போய்விடும்' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'ஜெ., தலைமையில், ஆட்சி நடந்தது... திடீர் முதல்வராக பொறுப்பேற்ற, இ.பி.எஸ்., ஆட்சி கூட, தமிழகத்தில் ஜோரா நடக்குது... பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைக்கும் தி.மு.க., தலைவர், ஸ்டாலினால் முதல்வராக முடியவில்லையே...' என கிண்டலாகக் கூற, சுற்றியிருந்தோர் சிரித்தனர்.
'ஸ்டாலினால் முதல்வராக முடியலியே!'
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
வாசகர் கருத்து (2)
-
-
அதிமுகவின் பிளவு, குறைகள் பற்றி குறிப்பிட்டு விட்டால் இவர்களின் குறைகள் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுவிடும் என்ற வெகு மலினவான சிந்தனை
இது என்றைக்கோ கேட்ட வசனம், மலரும் நினைவுகளில் இருந்து எடுத்து விடுகிறார் போலும்.