dinamalar telegram
Advertisement

ஹெச்.ராஜா முதல்வரா?

Share

ஹெச்.ராஜா முதல்வரா?



மதுரையில் நடந்த, பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், அக்கட்சியின் மாநில பொதுச் செயலரான, சீனிவாசன் பங்கேற்றார். அவரிடம், தேசியச் செயலர் பொறுப்பு, மீண்டும் ஹெச்.ராஜாவிற்கு வழங்காதது குறித்து, நிர்வாகிகள் ஆதங்கத்துடன் கேட்டனர்.
அதற்கு சீனிவாசன், 'சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி அமைச்சரவையில், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இடம் பெறுவர்...' என்றார்.அங்கிருந்த கட்சி நிர்வாகி ஒருவர், 'அள்ளி விடுறதுன்னு முடிவாகிடுச்சு... அதுல என்ன கஞ்சத்தனம்? ஹெச்.ராஜா, முதல்வராவாருன்னு சொல்ல வேண்டியது தானே...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    பாவம், அவரே கட்சி மேலிடத்தின் கவனிப்பில்லாமல் நொந்து கிடக்கிறார் , இதில் தேர்தலில் வென்று, அமைச்சர் ஆகலாம் என்று கடுப்பேற்றுகிறாரே

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement