dinamalar telegram
Advertisement

விஷயம் புரியாமல் சத்தம் போடலாமா?

Share

விஷயம் புரியாமல் சத்தம் போடலாமா?


பொள்ளாச்சியில், வடக்கு ஒன்றிய, தி.மு.க., சார்பில் நடந்த, கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழாவில், அக்கட்சியின் சட்டசபை கொறடா, சக்கரபாணி பங்கேற்றார்.அதன் பின், நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'தமிழகத்தில், 'நீட்' தேர்வுக்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என, தி.மு.க., கேட்கவில்லை. மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தான், சட்டசபையில், ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்' என்றார்.
அங்கிருந்த நிருபர், 'தி.மு.க.,வினர், ஊர் ஊருக்கு, நீட் தேர்வை ரத்து செய்யணுமுன்னு, ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்டு இருக்காங்க... தலைமை என்ன சொல்லுதுன்னே தெரியாமத் தான், அவங்க சத்தம் போடுறாங்களா...' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    பொதுமக்கள் அரசு பள்ளி மாணவர்கள் நீட் இல் முன்னணிக்கு வந்தபின், இவர்களின் கூச்சலுக்கு மதிப்பளிக்கவில்லை எனவே கொஞ்சம் ராகத்தை மாற்றிப் பாடுகிறர்கள்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement