dinamalar telegram
Advertisement

கண்டுக்காம இருக்குறதும் குற்றமே!

Share

கண்டுக்காம இருக்குறதும் குற்றமே!



சென்னை தலைமைச் செயலகத்தில், உணவுத் துறை அமைச்சர் காமராஜ், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறுகையில், 'கொள்முதல் செய்யும்போது, விவசாயிகளிடம் முறைகேடு செய்யக் கூடாது என, அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களிடம் வாங்குவது, 1 ரூபாய் என்றாலும், அது பாவகரமான, கேவலமான பணம். பணம் பெற்றதாக புகார் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
அங்கிருந்த இளம் நிருபர், 'நான் தஞ்சாவூர்காரனுங்க... எங்க ஊருல, ஒரு நெல் மூட்டைக்கு, 40 ரூபாய் வசூலிக்கிறாங்க... லஞ்சம் வாங்குறது மட்டும், கேவலமான செயல் இல்லைங்க... அதை கண்டுக்காம இருக்குற ஆட்சியாளர்களும்...' என இழுத்தார். சுற்றியிருந்தோர் அவரின் கருத்தை ஆமோதித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அந்த நாற்பது ரூபாயில், அமைச்சருக்கு கணிசமாக வந்துவிட்டால் பாவம் எல்லாம் பறந்தோடிவிடாதா ?

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement