dinamalar telegram
Advertisement

பட்டாசில் இருந்து வருவது சத்தமல்ல!

Share

காங்., ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு வெடிப்பதற்கும், விற்பதற்கும் தடை விதித்துள்ள அதிர்ச்சியை தாங்க முடியாத நிலையில், அடுத்து, டில்லியில் ஆம் ஆத்மி கட்சியின், சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், பட்டாசு எதிர்ப்பு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்.பட்டாசு தயாரிப்பாளர்கள் மத்தியில் இது ஒரு பேரடியாக விழுந்துள்ளது. பட்டாசை சத்தம் தரும் ஒரு பொருளாக மட்டுமே பார்ப்பதால் வரும் கோளாறு இது.

வறண்ட பூமியான சிவகாசியில், பட்டாசு தொழில் தான் பிரதானம். தீபாவளியன்று ஒரு நாள் கொளுத்தி மகிழும் பட்டாசை தயாரிக்க, சிவகாசியில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஆண்டு முழுதும் உழைக்கின்றனர்.இந்த தொழிலாளர்களுக்கு, இதை விட்டால் வேறு தொழில் தெரியாது. தயாரிப்பு தொழிலில் இருப்பர். அதில் இருந்து பெறும் வருமானத்தில் தான் குடும்பத்தை கவுரவமாக நடத்துகின்றனர்; பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர்; திருமணம் செய்து வைக்கின்றனர். மொத்தத்தில் யாருக்கும் சிரமம் தராமல், எவருக்கும் பாரமாக இல்லாமல், இன்று, நேற்று அல்ல. பல ஆண்டுகளாக, இந்த தொழிலில் வாழ்ந்து வருகின்றனர். வெடித்து கரியாகப் போகும் பட்டாசிற்கு பின்னால், இத்தனை பேரின் வாழ்க்கையும், சந்தோஷமும் அடங்கியிருக்கிறது என்பதை உணர்ந்ததால்தான் என்னைப் போன்றவர்கள் இந்த விஷயத்தில் தெரிந்த காசை கரியாக்குவோம்.

ஆண்டு முழுதும் உழைத்துக் கொண்டிருந்த பட்டாசு தொழிலாளர்கள் வாழ்க்கையில், கொரோனா தான் முதல் மண்டை போட்டது. கிட்டத்தட்ட, ஏழு மாதங்கள் வேலைவாய்ப்பின்றி பொருளாதார ரீதியாக சிரமப்பட்டனர்.பட்டாசு உற்பத்தியாளர்கள் கருணையுடன் அளித்த, அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தொழிலாளர்களின் பசியைபோக்கியது. ஆனால், உழைத்து பிழைத்த அவர்கள் மனது , அதை அரைமனதுடன் தான் ஏற்றது. ‛எப்போது வேலைக்கு போவோம்...' என்ற மன உளைச்சலுடன் இருந்தனர். கடந்த இரண்டு மாதங்களாக தான் முழு மூச்சுடன் பட்டாசு உற்பத்தியில் இறங்கி உள்ளனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ராஜஸ்தான் காங்கிரஸ் மாநில அரசு, திடீர் தடை விதித்துள்ளது. சிவகாசியில் தயாராகும் பட்டாசுகள் பெரும்பாலும், வட மாநிலங்களில் தான் பிரமாதமாக விற்பனையாகும். தமிழகத்தில், ஒரு வீட்டில், 500 ரூபாய்க்கு வாங்கினால் அந்த மாநிலங்களில், சர்வ சாதாரணமாக 5,000 ரூபாய்க்கு வாங்குவர். அதுவும் ‛சிவகாசி பட்டாசு தான் வேண்டும்' என்று கேட்டு வாங்குவர். மேலும், இந்த பட்டாசு தொழிலை மையமாக வைத்து, ‛டிரான்ஸ்போர்ட், உள்ளிட்ட, பல்வேறு உபதொழில்களும், இந்த நாட்களில் களைகட்டும். அத்துடன், 20 நாட்களுக்கு முன்பாகவே நாடு முழுவதும் போடப்படும், பல ஆயிரக்கணக்கான பட்டாசு கடைகளால் குறைந்தது 5-10 பேர் நாள் சம்பளத்திற்கு வேலை செய்வர். அந்த சம்பளமும் 500 - 1,000 ரூபாய் வரை இருக்கும். தீபாவளி நேரத்தில் கணிசமாக கிடைக்கும் இந்த சம்பளம் கூட , பல ஆயிரம் பேரின் வாழ்க்கையில் சந்தோஷம் எனும் தீப ஒளியை ஏற்றும்.

ஒரு மாதத்திற்கு முன்பே வாங்கிய பட்டாசை, கட்டிலுக்கு அடியில் வைத்து விட்டு, பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் அதை எடுத்து பரவசமாக பார்ப்பதும், பின் திரும்ப உள்ளே வைப்பதும் நம் சிறுசுகளின் வழக்கம்.அம்மாவிடம், ‛ பட்டாசு வெடிக்க இன்னும் எத்தனை நாள் இருக்கு...' என்று ஆர்வமாக கேட்ட இனிய தருணம், எல்லார் வாழ்க்கையிலும் வந்திருக்கும். அந்த அனுபவத்தை இந்த தலைமுறை குழந்தைகளை அனுபவிக்கவிடாமல் பறித்து விடாதீர். கொரோனா காரணமாக பள்ளிக்கூடம் இல்லாமல், மன உளைசசலில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த பட்டாசுகள் நிச்சயம் சந்தோஷம் தரும்.

கொரோனாவை காரணம் காட்டி பண்டிகைகளை ஒதுக்கவும் கூடாது; அதில் இருந்து ஒதுங்கவும் கூடாது.தீபாவளி என்றாலே, பட்டாசு, இனிப்பு, புத்தாடைகள் தான். இதில், முதலில் இருக்கும் பட்டாசு வெடிகளின் சத்தம், எப்போதோ கேட்டு இருக்க வேண்டும். ஆனால், தீபாவளிக்கு சில நாட்களே இருக்கும் சூழ்நிலையில் கூட, இந்த வருடம் இன்னும் கேட்கவில்லை என்பது வருத்தமாக தான் இருக்கிறது. பொருளாதாரம் காரணமாக நிறைய வாங்காவிட்டாலும், முடிந்தளவு கொஞ்சமாவது வாங்குங்கள். அதன் மூலம், ‛நாங்கள் இருக்கிறோம்' என்று சிவகாசி தொழிலாளர்களுக்கு கொஞ்சமாவது ஆறுதலாக இருங்கள்.

ராஜஸ்தான், டில்லி அரசுகளை பார்த்து மற்ற மாநில அரசுகளும் விபரீதமாய் முடிவு எடுப்பதற்கு முன், இந்த அரசுகளின் தடையை நீக்க, இங்குள்ள அரசியல் பலமுள்ளவர்கள் முன்வர வேண்டும். ஏனெனில், பட்டாசுகளால், ஒருவர் இருவர் வாழவில்லை; ஊரே வாழ்கிறது.!
எல்.முருகராஜ்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (7)

 • Sivaji Balakrishnan - CHENNAI,இந்தியா

  தீபாவளி பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் புகையிலிருந்து வரும் ரசாயன பொருட்களால், கொரோனா வைரஸ் அழிந்துவிடும் என்று அமெரிக்கா விஞ்ஞானி கண்டு பிடித்துள்ளார் என்று சொன்னால் உடனே தடை நீங்கி விடும்.

 • S Ramkumar - Tiruvarur,இந்தியா

  இதை எதிர்த்து சுடலை எதாவது செய்வாரா.

 • P. S. Ramamurthy - Chennai,இந்தியா

  His expressions are great and talks about reality. It is very Paining to read. Comments of Digital Pattasu etc. good to read but have to understand the WORKING CLASS. Long Back when I commented about the Marriage conducted by Jayalitha Madam spending crores, my brother a professor said he is happy because lot of workers got some amount. So what expressed by the author has to be appreciated. his ideas were GREAT.

 • Pattasu - Paataavu,பனாமா

  டிஜிட்டல் பலகாரம், டிஜிட்டல் பட்டாசு, டிஜிட்டல் குளியல் எல்லாமே இனிமே டிஜிட்டல் தான் முருகேசு

 • Pattasu - Paataavu,பனாமா

  ஏம்ப்பா முருகேசு இனிமே இவனுக டிஜிட்டல் பட்டாசு வெடியுங்கள் செல் போனிலில் கணினியில் இணையத்திலில் விடியோவில் பார்த்து மகிழுங்கல என சொல்லுவாய்ங்களோ

 • ஆப்பு -

  காலை ஒரு மணி.. இரவு ஒரு மணி வெடிக்கலாமுனு உத்தரவு. இதுல ராஜஸ்தானில் பட்டாசு வாங்கலேன்னா என்ன? கர்னாடகாவுல தடை பண்ணினா என்ன?

 • Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா

  விடுங்க....இனிமே கிருஸ்த்துமஸ், புதுவருடம், போன்ற நாட்களில் வெடிக்கலாம்....அதுக்கு எல்லாம் தடை போட மாட்டாங்க இந்த மத சார்பற்றவங்க....

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement