'வாரிசு அரசியல் இல்லையா?'
அ.தி.மு.க., இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயல்பாடு மற்றும் ஆலோசனைக் கூட்டம், பெரம்பலுாரில் சமீபத்தில் நடந்தது.இதில், எம்.பி., வைத்தியலிங்கம் பங்கேற்று பேசுகையில், 'நாம், பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களிடம் மனம் விட்டுப் பேசி, அ.தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கி கூற வேண்டும். அ.தி.மு.க.,வில், வாரிசு அரசியல் கிடையாது. உண்மையாக உழைக்கும் ஒவ்வொரு தொண்டனுக்கும், கட்சியிலும், ஆட்சியிலும் பொறுப்புகள் வந்து சேரும்' என்றார்.அங்கிருந்த தொண்டர் ஒருவர், 'விட்டா, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன், கட்சிக்காக பல போராட்டங்களில் பங்கேற்று, சிறை சென்று, இன்னைக்கு எம்.பி., ஆகியிருக்காருன்னு சொல்வாரு போல...' எனக் கூறவும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.
'வாரிசு அரசியல் இல்லையா?'
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
வாசகர் கருத்து (1)
பன்னீரின் மகன் கட்சிக்காக உழைத்து, எம் பி தேர்தலில் ‘நேர்மையாக’ வெற்றி பெற்ற கதை மக்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும் இன்னும் இந்தப் பல்லவி பாடினால் இவரை காமெடி பீஸாகத்தான் பார்ப்பார்கள்