நம்புங்க பா, அவரு ஹீரோ தான்!
வேலுார் மாவட்டம், காட்பாடியில், தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன், நிருபர்களை சந்தித்தார்.அப்போது, அவர் கூறுகையில், 'தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட, உதயநிதி ஸ்டாலினை கைது செய்து, அவரை ஹீரோ ஆக்கி விட்டனர். எங்களுக்கு நல்ல விளம்பரத்தைத் தேடிக் கொடுத்து விட்டனர்' என்றார்.அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'சொந்த காசில் படமெடுத்து, ஹீரோவாக நடிச்சாலும், மக்கள் அவரை மதிக்கவே இல்லை... அதனால் தான், அரசியலில் ஹீரோ எனச் சொல்லி, மனசைத் தேத்திக்கிறாங்க...' என்றார்.அருகிலிருந்த மூத்த நிருபர், 'அரசியலிலும், தி.மு.க., என்பது, அவங்க கம்பெனி தானே...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.
என்னமோ கைது செய்து ஆறு மாதம் உள்ளே தள்ளிவிட்டது போல் கூவி, தொண்டர்களை உசுப்பேத்தி விட்டால் பெரிய தலைவர் ஆகிவிட்டதாக எண்ணம் சீனியர்கள் தலையெழுத்து இவருக்கு ஜால்றா போட்டாகும் நிலை