'அவங்களே குழம்பிட்டாங்க!'
அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் செய்த, தி.மு.க., இளைஞரணிச் செயலர் உதயநிதியை, போலீசார் கைது செய்தனர். இதைக் கண்டித்து, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், சேவூர் ரோடு பிரிவில், திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலர் பத்மநாபன் தலைமையில் கூடிய அக்கட்சியினர், அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.அதில், உணர்ச்சிவசப்பட்ட கட்சி நிர்வாகி ஒருவர்,
'விடுதலை செய்; விடுதலை செய், முதல்வர் இ.பி.எஸ்.,யை விடுதலை செய்' எனக்கூற, மற்றவர்களும் அதை அப்படியே கூறினர். அதன்பின் சுதாரித்த கட்சியினர், 'உதயநிதியை விடுதலை செய்' என, மாற்றி கோஷமிட்டனர். இதை வேடிக்கை பார்த்த முதியவர் ஒருவர், '10 வருஷமா ஆட்சியில் இல்லை... அதனால பாவம், அவங்களே குழம்பிட்டாங்க...' என்றதும்,
சுற்றியிருந்தோர் சிரித்தனர்.
'அவங்களே குழம்பிட்டாங்க!'
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
வாசகர் கருத்து (1)
முதலில் ஒருவர் கூவியதும் அதே பல்லவியைப் பிடித்து கோஷம் விடுவதுதான் இவர்கள் வழக்கம்