'இதுவல்லவா போராட்டம்!'
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, கோவை மாவட்டம் வால்பாறையில், எதிர்க்கட்சியினர் மறியல் நடத்தினர்.அவர்களை கைது செய்து, மண்டபத்துக்கு அழைத்துச் செல்ல, பஸ் வர தாமதமானது. இதனால், இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, 'பஸ் வரும் வரை, 'வெயிட்' பண்ணுங்க' என, போராட்டக்காரர்களிடம் கூறினார்.
அதற்கு அவர்கள், 'நடக்குற துாரத்துல தானே, மண்டபம் இருக்கு... ஒரு நிமிஷம் மறியல் நடத்திட்டு, நாங்களே வந்துடுறோம்...' என்றனர்.அப்போது பஸ் வந்து விட்டது. இதையடுத்து அவர்கள், மறியல் நடத்தி, போட்டோவுக்கு, 'போஸ்' கொடுத்த பின், பஸ்சில் ஏறினர்.இதைப் பார்த்த, முதியவர் ஒருவர், 'இப்படி போராட்டம் நடத்தினா, யாருக்கும் பிரச்னை இல்லை... போட்டோவை, கட்சித் தலைமைக்கு அனுப்பி, நல்ல பேரும் வாங்கிடலாம்...' என்றதும், அருகிலிருந்தவர் அதை ஆமோதித்தார்.
'இதுவல்லவா போராட்டம்!'
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
வாசகர் கருத்து (1)
மண்டபத்திலும் நல்ல விருந்து சாப்பிட்டு ஜாலியாக ‘போராட்டத்தை’ முடித்துக் கொள்ளலாம் பா ம க மாதிரிப் பேரைக் கெடுத்துக்க வேண்டாம்