'கட்சி சுத்தமாக காலியாகுது!'
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருள்புரத்தில், தே.மு.தி.க., சார்பில் தொண்டர்கள் இணைப்பு விழா, சமீபத்தில் நடந்தது. விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசுகையில், 'என் தந்தை கனவை, நனவாக்க போராடி வருகிறேன். அரசியலில் நல்ல மனிதர்களை சம்பாதிக்க விரும்புகிறேன். ஆட்களை இழுக்கும் கட்சிகளால், தே.மு.தி.க., சுத்தமாகி வருகிறது' என்றார்.இதைக் கேட்ட இளம்நிருபர், 'விஜயகாந்தின் கனவு, தே.மு.தி.க.,வை வளர்க்குறது... இப்போ கட்சி, சுத்தமா காலியாகிட்டு இருக்கு... இது தெரியாம பேசுறாரு...' என்றார்.அருகிலிருந்த மூத்த நிருபர், 'தேர்தல் நேரத்துல இந்த மாதிரி, ஏதாவது 'பில்டப்' கொடுத்தா தானே, கூட்டணிக் கட்சியிடம் பேரம் பேச முடியும்...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.
இவர்களைக் கூட்டணிக்கு அழைக்க கட்சிகள் போட்டி போடுகின்றனவாக்கும் அப்பா கஷ்டப்பட்டு வளர்த்தார். அவர் கண் முன்னே கட்சி கரைந்து காணாமல் போகிறது