காங்கிரசைச் சேர்ந்த எம்.பி., திருநாவுக்கரசர், திருச்சியில் நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'அ.தி.மு.க., கூட்டணியில், அது தான் பெரிய கட்சி. அதனால் அவர்கள், முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளனர். கூட்டணியில், குறைவான இடங்களில் போட்டியிட்டும், பா.ஜ.,வினர், 'முதல்வரை நாங்கள் தான் முடிவு செய்வோம்' என்று சொல்வது, கேலிக்குரியது' என்றார்.
அங்கிருந்த மூத்த நிருபர், 'தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு பலம் இல்லை; ஆனால், அக்கட்சிக்கு இருக்கும் தைரியம், தமிழகத்தை ஆண்ட கட்சியான காங்கிரசுக்கு இல்லையே...' என்றார். அருகிலிருந்த இளம் நிருபர், 'அட, 'உதயநிதியின் மகன் வாழ்க'ன்னு, காங்கிரசார் கோஷம் போடுறாங்களே பா... இதைவிட எப்படி, தி.மு.க.,வுக்கு அடிமையாக இருக்க முடியும்...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.
'உதயநிதியின் மகன் வாழ்க!'
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!