'தேவையா இந்த அசிங்கம்?'
சென்னை அடுத்த வானகரம் ஊராட்சி, ஓடமா நகரில், தி.மு.க., சார்பில், 'அ.தி.மு.க.,வை நிராகரிப்போம்' என்ற கிராம சபைக் கூட்டம், சமீபத்தில் நடந்தது.இந்நிகழ்ச்சியில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வான, மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் பேசிய பெண் ஒருவர், தங்கள் பகுதி குறையை கூறிய பின், 'தி.மு.க.,வை நிராகரிப்போம்' என, அழுத்தம் திருத்தமாக மூன்று முறை கூறினார்.
இதையடுத்து, தி.மு.க., நிர்வாகிகள் ஓடி வந்து கூறிய பின், 'அ.தி.மு.க.,வை நிராகரிப்போம்' என, அந்த பெண் கூறினார். அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'கூலிக்கு ஆள் பிடித்து வந்தால், இப்படித் தான் நடக்கும்... என்ன பேசணுமுன்னு சொல்லிக் கொடுத்து அழைச்சிட்டு வர வேண்டாமா... பாருங்க, அந்த பொண்ணு, தன் மனசுல இருந்ததை சொல்லிருச்சு...' என்றதும்,
சுற்றியிருந்தோர் சிரித்தனர்.
'தேவையா இந்த அசிங்கம்?'
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
வாசகர் கருத்து (1)
காசுக்கும் க்வார்ட்டருக்கும் வருபவர்களை லாரியில் அடைத்துக்கொண்டு வருவது தான் ஏஜெண்டின் வேலை பாடம் சொல்லித்த்தர எல்லாம் அவர் முன்வர மாட்டார் அவருக்கே எந்த கட்சிக் கூட்டம் என்று சில சமயம் தெரியாதே