dinamalar telegram
Advertisement

கற்பூரம் ஏந்தி சத்தியம் செய்யும் போலீசார்!

Share

கற்பூரம் ஏந்தி சத்தியம் செய்யும் போலீசார்!



''அமைச்சர் முன்னாடியே ஏக வசனத்துல பேசுறதால, எல்லாரும் வெறுப்புல இருக்காங்க பா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

''எந்த துறை விவகாரமுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.


''பத்திரப்பதிவு துறையில அமைச்சர் மூர்த்தி, மண்டல வாரியா ஆய்வுக் கூட்டங்களை நடத்திட்டு இருக்காருல்ல... அவரோட, துறையின் தலைமை அதிகாரிகளும் பங்கேற்கிறாங்க பா...

''இதுக்கு பொதுமக்கள் மத்தியில வரவேற்பு கிடைச்சிருக்கு... அதே நேரம், இந்தக் கூட்டங்கள்ல, தலைமை அதிகாரிகள் சிலர், மாவட்ட பதிவாளர்கள், சார் - பதிவாளர்களை சகட்டு
மேனிக்கு, அதுவும் ஒருமையில வறுத்தெடுக்குறாங்க பா...

''அமைச்சரிடம் நல்ல பெயர் எடுக்கிறதுக்காக இப்படி ஜம்பமா பேசுற இவங்களை, அமைச்சரும் கண்டிக்க மாட்டேங்கிறார்... இதுல, லஞ்ச அதிகாரிகள் திட்டு வாங்கி, துடைச்சு விட்டுட்டு போனாலும், நேர்மையான அதிகாரிகள் மனசு வெறுத்து போறாங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.
''பக்தர்களை விரட்டி அடிக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''எந்த கோவில்ல பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''திருச்சி சமயநல்லுார் மாரியம்மன் கோவில், திருச்செந்துார் முருகன் கோவில்ல பக்தர்கள் பலரும் தங்களது வேண்டுதல் நிறைவேற மடிப்பிச்சை எடுப்பாவ... ஏழை முதல் பெரும் பணக்காரர்கள் பலரும் இந்த மாதிரி மடிப்பிச்சை எடுக்கிறது உண்டு வே...


''இதுல, திருச்செந்துார் முருகன் கோவில்ல மடிப்பிச்சை எடுக்க, தினமும் பெண் பக்தர்கள் நிறைய பேர் வராவ... ஆனா, அறநிலையத் துறை அதிகாரி உத்தரவுப்படி, இந்த பெண்களை கோவில் ஊழியர்கள், அடிச்சு துரத்தி விடுதாவ... இதனால, பக்தர்கள் நொந்து போயிருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''கற்பூரம் ஏத்தி சத்தியம் வாங்கறா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் குப்பண்ணா.

''எங்க பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''சேலம் எஸ்.பி.,யா, ஜூன் 6ம் தேதி ஸ்ரீஅபிநவ் பொறுப்பு ஏத்துண்டார்... இதுவரைக்கும், அ.தி.மு.க., வினர் நடத்திண்டு இருந்த 720 சந்து மதுக்கடைகளை மூடிட்டார் ஓய்...

''இது போக, கள்ளச்சாராய தடுப்புலயும் தீவிரமா இருக்கார்... மாவட்டத்துல 90 சதவீத சந்துக்கடைகளை இப்ப மூடியாச்சு...

''தினமும் மதியம் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் போற எஸ்.பி., 'உங்க ஏரியாவுல சந்துக்கடைகள், சாராய விற்பனை நடக்கக் கூடாதுங்கறதுல நீங்க உறுதியா இருக்கணும்'னு இதமா அறிவுரை சொல்லிட்டு போறார் ஓய்...

''இதனால நெகிழ்ந்து போற இன்ஸ்பெக்டர்கள், எஸ்.பி., போனதும், கற்பூரத்தை ஏத்தி சக போலீசாரிடம், 'நம்ம பகுதியில மது, சாராயம் விற்க நான் துணையா இருக்க மாட்டேன்'னு சத்தியம் வாங்கறா... போன வாரம் ஓமலுார், தீவட்டிப்பட்டி, தாரமங்கலம்னு பல ஸ்டேஷன்கள்ல இந்த சத்தியம் வாங்கற நிகழ்ச்சிகள் நடந்திருக்கு ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

''நல்லது நடந்தா சரி தான் பா...'' என்றபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர். நாயர், வியாபாரத்தை கவனிக்க நடந்தார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (3)

  • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

    yenna thaan

  • ramesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    என்ன இன்னைக்கு டி எம் கே வ திட்ட ஒன்னும் கிடைக்கலையா

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இந்த ‘கற்பூர சத்தியம்’ எல்லாம் அடுத்து வரும் அதிகாரி நல்ல ‘ கலெக் ஷன் ‘ மன்னனாக வந்தால் காற்றில் கரைந்த கற்பூரமாகிவிடும் 😀

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement