Advertisement

தாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை

ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது கங்கையில் நீராடுவதற்கு சமம் என்பது நம்பிக்கை. திருச்சி திருப்பராய்த்துறை காவிரி ஆற்றில் நடைபெற்ற துலா ஸ்நானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடினர். திருச்சி திருப்பராய்த்துறை பசும்பொன் மயிலாம்பிகை சமேத தாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னர் வெள்ளி ரிஷப வாகனத்தில் காவிரி கரைக்கு தாருகாவனேஸ்வரர் எழுந்தருளினார். அங்கு சிவபெருமானோடு எடுத்து வரப்பட்ட அஸ்திர தேவரானது சிவசிவ கோஷத்தோடு காவிரி ஆற்று நீருக்குள் தீர்த்தவாரி நடைபெற்றது. துலா ஸ்நானத்தை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement