dinamalar telegram
Advertisement

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் பழமைவாய்ந்த சிவசக்தி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் புதியதாக ராஜகோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டு, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பல்வேறு ஹோமம், சிறப்பு பூஜைகள் நடந்தன. வெள்ளிக்கிழமை காலை மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களின் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதனையடுத்து, சிவசக்தி அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஓம் சக்தி ஓம் சக்தி பக்திக் கோஷங்களுடன் அம்மனை வழிபட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement