dinamalar telegram
Advertisement

குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காதது ஏன்? Covid-19 Doctors Death | Dinamalar

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்கள் அயராது உழைத்து வருகின்றனர். இதில் பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சிலர் மரணமடைந்துள்ளனர். மதுராந்தகம் அரசு மருத்துவர் டாக்டர் சுகுமார் கொரோனாவால் உயிரிழந்தார், அவரின் குடும்பத்திற்கு அரசு 50 லட்சம் நிவாரணம் அறிவித்தது, ஆனால் 25 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, மீதி தொகை பற்றி பதில் இல்லை, மேலும் தூத்துக்குடி ஏரல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் கல்யாணராமன் மரணத்திற்கு நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அரசு மருத்துவர்களை கைவிட்டதாக அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி குற்றம்சாட்டுகிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement