dinamalar telegram
Advertisement

மக்களை திசை திருப்ப பினராயி முயற்சி என புகார்

30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் பினராயி விஜயன் அரசுக்கு பெரும் அவப்பெயர் ஏற்பட்டது. இப்போது, 100 கோடி தங்க மோசடியில் காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சேஸ்வரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ கமருத்தீன். காசர்கோட் மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் ஃபேஷன் கோல்ட் ஜுவல்லரி நகைக்கடை தொடங்கினார். manjeshwaram mla kamaruddin கேரளா முழுவதும் நகைக்கடைகளை திறக்கவிருப்பதாக கூறி, முதலீட்டாளர்களிடம் பணம் வசூலித்தார். 800க்கு மேற்பட்டவர்கள் பல லட்சங்களை முதலீடாக போட்டனர். ஆரம்பத்தில் முதலீட்டாளர்களுக்கு லாபத்தில் பங்கு தரப்பட்டது. சில மாதங்கள் கழித்து பங்கு வருவது நின்று போனது. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை திரும்ப கேட்கத் தொடங்கினர். சில மாதங்களுக்கு முன் ஃபேஷன் கோல்ட் ஜுவல்லரி கடைகள் ஒரே நேரத்தில் திடீரென இழுத்து மூடப்பட்டன. நஷ்டம் ஏற்பட்டதால் மூடியதாகவும், முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்பத் தர ஏற்பாடு செய்வதாகவும் கமருத்தீன் கூறினார். பணத்தை முதலீடு செய்து ஏமாந்த 200க்கு மேற்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த மோசடி பற்றி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தியது. 100 கோடி ரூபாய்க்கு மேலாக மோசடி நடந்திருக்கலாம் என தெரிய வந்தது. இதுதொடர்பாக, பேஷன் கோல்ட் ஜுவல்லரி தலைவர் கமருத்தீனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் காசர்கோட்டில் நேற்று விசாரணை நடத்தினர். 5 மணி நேர விசாரணைக்குப்பின் கமருத்தீன் கைது செய்யப்பட்டார். தன் மீதான குற்றச்சாட்டுகளை எம்எல்ஏ கமருத்தீன் மறுக்கிறார். முதலீட்டாளர்களுக்கு என்னால் பணத்தை திரும்ப தர முடியும். அதற்காகத்தான் முயற்சித்து வந்தேன்; ஆனால் போலீசார் என்னை அவசரமாக கைது செய்துள்ளனர். என் கைதின் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்றார். 30 கிலோ தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய சொப்னா சுரேஷுக்கு உதவியதாக, முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரை அலமாக்கத்துறை கடந்த 28 ம்தேதி கைது செய்தது. மறுநாளே, போதை பொருள் கும்பலுக்கு சட்டவிரோதமாக பணம் கொடுத்த வழக்கில் மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷும் கைதானார். இதனால் பினராயி அரசு மீது கடும் அதிருப்தி எழுந்துள்ள நிலையில் அந்த பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திருப்பவே கமருத்தீன் கைது செய்யப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். முதலீடு செய்து ஏமாந்தவர்களில் பலர் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப தரும்படி கமருத்தீனை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 2 மாதங்களுக்கு முன்பே எச்சரித்திருந்தது. இப்போது கைதாகி இருப்பதால் கமருத்தீனை சஸ்பெண்ட் செய்வது பற்றி கட்சித் தலைமை யோசித்து வருகிறது. பண மோசடி குற்றச்சாட்டில் கைதாகும் முதல் கேரள எம்எல்ஏ கமருத்தீன்தான். குற்றச்சாட்டு நிரூபணமானால் 7 ஆண்டு சிறைத்தண்டனை கிடைக்கும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement