dinamalar telegram
Advertisement

12 மணிநேர பயணம், 4 மணிநேரமாக குறைகிறது

182 மீட்டர் உயர படேல் சிலைக்கு உலக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க ஆமதாபாத் ... கேவாடியா இடையே கடல் விமான சேவையை பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன் தொடங்கி வைத்தார். அடுத்ததாக, குஜராத்துக்கு கடல் வழி போக்குவரத்து திட்டத்தை பிரதமர் கொண்டு வந்துள்ளார். சூரத்தில் இருந்து பவ்நகருக்கு கப்பல் போக்குவரத்து சேவையை அவர் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். சூரத்தில் உள்ள ஹசிரா Hazira துறைமுக நகரிலிருந்து பவ்நகரில் உள்ள கோகா Ghogha வரையில் தொடங்கப்பட்டுள்ள இந்த கப்பல் சேவை மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரத்தில் டு பவ் நகருக்கு சாலை வழி தூரம் 370 கிலோ மீட்டர். குறைந்தது 10 முதல் 12 மணி நேரமாகும். கப்பல் போக்குவரத்து மூலம் சூரத்தில் டு பவ் நகருக்கு செல்லும்போது பயண தூரம் 90 கிலோ மீட்டராக குறைகிறது. பயண நேரம் 4 மணி நேரமாக குறைகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement