dinamalar telegram
Advertisement

ஓம் என 60 வினாடிகளுக்கு ஒலி எழுப்பும்

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அருகே திருவோணமங்களம் ஞானபுரி சித்ரகூட சேத்ரம் ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, 33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் இடுப்பில் நோய் தீர்க்கும் சஞ்சீவி மூலிகைகளுடன் அருள்பாலிப்பது வேறெந்த கோயிலுக்கும் இல்லாத சிறப்பு. நாளாம்கட்டளை கிராமத்தை சேர்ந்த தியாகராஜன், அவரது மகன்கள் சீனிவாசன், பரந்தாமன் ஆகியோர் ஒன்றரை டன் எடை கொண்ட பிரமாண்ட கோயில் மணியை செய்தனர். மணி இன்று கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு கோதண்டராமர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஸ்தாபகர் ரமணி அண்ணா தலைமையில் பட்டாச்சாரியார்கள் பூஜைகளை செய்தனர். பிறகு, ஆஞ்சநேயர், கோதண்டராமர், லக்ஷ்மி நரசிம்மர் சன்னதிகளில் மணியை ரமணி அண்ணா மற்றும் அறங்காவலர்கள் ஒலிக்கச் செய்தனர். 60 வினாடிகளுக்கு ஓம் என தெய்வீக ஒலியை எழுப்பும் விதமாக மணி உருவாக்கப்பட்டுள்ளது. மகாமணி சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement