dinamalar telegram
Advertisement

சிதம்பரத்தின் மழைநீர் வடிகால் ரகசியம்

புரெவி புயலின் போது பெய்த தொடர் மழையால், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் உட்பிரகாரம் உள்ளிட்ட பல இடங்களில் மூன்றடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கியது. கோவிலில் இருந்து தண்ணீர் வெளியேறாததற்கு காரணம் என்ன என்பது குறித்து நகராட்சி துறை, வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில், 800 ஆண்டுகளுக்கு முன் சோழர் காலத்தில் கட்டப்பட்ட நீர் வழி கால்வாயில் அடைப்புகள் இருந்ததால் மழைநீர் வடியாமல் போனது தெரிந்தது. கோபுரம் அருகே அமைந்துள்ள வடிகால் நீர் வழிப்பாதையை தோண்டும் பணிகள் துவங்கின. அப்போது நடராஜர் கோயிலில் இருந்து துவங்கும் வழிப்பாதை திருப்பாற்கடல் குளத்திற்கு சென்று அங்கிருந்து தில்லை காளியம்மன் கோயில் குளத்திற்கு செல்வது தெரிந்தது. 800 ஆண்டுகளுக்கு முன்பே கருங்கல் கொண்டு அமைக்கப்பட்ட நீர்வழி வடிகால் போதிய பராமரிப்பின்றி புதைந்து போனது. 4 அடி உயரத்துடன் கட்டப்பட்ட வடிகால் நல்ல நிலையில் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். அதன் பிறகு உள்ள வழித்தடத்தை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு தண்ணீர் எளிதில் தில்லை காளியம்மன் கோயில் குளத்திற்கு செல்லும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement