dinamalar telegram
Advertisement

டிசம்பருக்குள் ஊடுருவலாம் என உளவுத்துறை தகவல்

மியான்மரில் உள்ள ரகாய்ன் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையில் வசித்து வந்தவர்கள் ரோஹிங்க்யா இன முஸ்லிம்கள். 2017ல் மியான்மர் ராணுவம் மற்றும் புத்த மதத்தினரால் கடும் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட ரோஹிங்க்யாக்கள் அங்கிருந்து தப்பி, வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ஊடுருவினர். சில ரோஹிங்க்யா குழுக்கள் ஆயுதம் தூக்கியும் போராடி வருகின்றன. அந்த வகையில் மலேசியாவில் செயல்படும் ஒரு ரோஹிங்க்யா அமைப்பு இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. அயோத்தி, புத்தகயா, பஞ்சாப், ஸ்ரீநகரில் தாக்குதல் நடத்த அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளதை இந்திய உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து, டில்லி, காஷ்மீர், உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், அரியானா, மேற்குவங்கத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை உளவுத்துறை எச்சரித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement