dinamalar telegram
Advertisement

கொரோனா காரணமாக காலவரையின்றி நிறுத்தம்

சென்னை மாநகராட்சியில் ஜனவரி முதல் சொத்து வரியுடன் சேர்ந்து குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்த திட்டம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கும் முறையை நிறுத்தி வைக்க வேண்டுமென பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு குடியிருப்பு நலச்சங்க பிரதிநிதிகள் கேட்டு கொண்டதால், தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் படி காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement