dinamalar telegram
Advertisement

அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு

அண்ணத்தை பட பிடிப்புகாக நடிகர் ரஜினிகாந்த கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் உள்ளார். படக்குழுவில் இருவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, படபிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை வெளியிட்ட செய்தி குறிப்பில், ரஜினிக்கு கொரோனா இல்லை, ஆனால் இரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement