dinamalar telegram
Advertisement

மார்ச் 31 வரை வாகன ஆவணங்கள் செல்லுபடியாகும்

டிரைவிங் லைசன்ஸ், பதிவு சான்று, தகுதி சான்று, பெர்மிட்கள் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களை புதுப்பிப்பதற்காக காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. அதற்கு இன்னும் மூன்று தினங்களே உள்ள நிலையில், ஆவணங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை அடுத்தாண்டு மார்ச் 31 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, கடந்த பிப்ரவரி முதல் காலாவதியான அனைத்து வாகன ஆவணங்களும் மார்ச் இறுதிவரை செல்லுபடியாகும். சமூக இடைவெளியை பின்பற்றும் இந்த நேரத்தில், ஆவணங்களை புதுப்பிக்க அரசு அலுவலங்களில் மக்கள் மொத்தமாக கூடுவதை தவிர்க்கவும், அத்தியாவசிய வாகன போக்குவரத்து தடைபடாமல் இருக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement