dinamalar telegram
Advertisement

இன்றைய விளையாட்டு ரவுண்ட் அப் | 02-01-2021 | Sports News Roundup | Dinamalar

இந்திய டெஸ்ட் அணியில் நடராஜன் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் சிட்னியில் வரும் ஜனவரி 7ல் துவங்குகிறது. இப்போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வேகப்பந்துவீச்சாளர் நடராஜன், ஷர்துல் தாகூர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும், காயத்தால் விலகிய உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோருக்கு பதிலாக இடம் பிடித்துள்ளனர். ----- மாட் ஹென்றி தேர்வு நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச் நகரில் ஜனவரி 3ல் துவங்குகிறது. இப்போட்டிக்கான நியூசிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர் மாட் ஹென்றி இடம் பிடித்துள்ளார். இவர், முதல் டெஸ்டில் காயமடைந்த நீல் வாக்னருக்கு பதிலாக தேர்வானார். ----- லிவர்பூல் அணி 'டிரா' இங்கிலாந்தில் நடக்கும் பிரிமியர் லீக் கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் லிவர்பூல், நியூகேசில் யுனைடெட் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. ----- பெங்கால் அணி அறிவிப்பு சையது முஷ்தாக் அலி 'டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் வரும் ஜனவரி 10ல் துவங்குகிறது. இத்தொடருக்கான பெங்கால் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக அனுஸ்துப் மஜும்தார், துணை கேப்டனாக ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் அபிமன்யு ஈஸ்வரன், மனோஜ் திவாரி, இஷான் போரெல் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement