dinamalar telegram
Advertisement

மக்கள் பயத்தை போக்க இஸ்ரேல் அரசின் சலுகைகள்

இஸ்ரேல் நாட்டில் பயன்பாட்டுக்கு வந்த பைசர் தடுப்பூசி 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு செலுதப்பட்டுள்ளது . நாட்டின் மக்கள் தொகை 88 லட்சம். அதில்100ல் 12 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் . டிசம்பர் 20 ஆம் தேதி முதல் தினமும் 1.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. சுகாதார கட்டமைப்புகள் சிறப்பாக உள்ளதால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. அதனால் உலகின் வேகமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் நாடுகளில் இஸ்ரேல் முதலிடத்தை பிடித்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கிரீன் பாஸ்போர்ட் வழங்கப்படும் . இதை வைத்து உணவங்கள் போகலாம். போக்குவரத்து வாகனங்களில் இலவசமாக பயணம் செய்யலாம் . தனிமைப்படுத்திக்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது . தடுப்பூசி போட்டுக்கொள்ள பயமாக இருந்தாலும் , சலுகைகள் வழங்குவதால் தடுப்பூசி போடும் ஆர்வம் மக்களுக்கு அதிகரித்துள்ளதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement