dinamalar telegram
Advertisement

150 நாள் வேலைக்கும் ஸ்டாலின் வாக்குறுதி

ரோடு, குமாரவலசு ஊராட்சி, மேட்டுப்பாளையம் கிராமத்தில், திமுகவின் மக்கள் கிராம சபை நடந்தது. இதில் பேசிய முக ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்றார். 100 நாள் வேலைவாய்ப்பு 150 நாட்களாக உயர்த்துவதோடு, அன்றைய கூலியை அன்றே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய ஊழியர்கள் இல்லாத நிலையில் மினி கிளினிக் தொடங்கியிருப்பது மக்களை ஏமாற்றும் திட்டம். முதியோர் உதவித்தொகை, இப்போது கட்சியினருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும், தகுதியுள்ள அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்கும். பார்லிமென்ட் தேர்தலில் 38 இடங்களை பிடித்த திமுக, அதிமுக அதிகாரத்தையும் தாண்டி, உள்ளாட்சி தேர்தலிலும் அதிக இடங்களை பிடித்தது. இன்னும் 4 மாதங்களில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று ஸ்டாலின் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement