dinamalar telegram
Advertisement

பொங்கல் திரைப்படங்களை கொண்டாட ரசிகர்கள் குஷி

கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் நவம்பர் முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டபோதும், 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இருக்கை பயன்பாட்டை படிப்படியாக அதிகப்படுத்த தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும் அதில் மாற்றம் கொண்டுவரப்படவில்லை. இதனிடையே, விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம், வரும் 13ம் தேதி திரையிட திட்டமிடப்பட்டது. தியேட்டர்களில் 50 சதவீத டிக்கெட்டுகள் மட்டும் விற்றால், படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்று தயாரிப்பு குழுவினர் கவலைப்பட்டனர். முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்த நடிகர் விஜய், தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement