dinamalar telegram
Advertisement

இன்றைய விளையாட்டு ரவுண்ட் அப் | 05-01-2021 | Sports News Roundup | Dinamalar

தேறிய வீரர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் சிட்னி சென்றனர். இதற்காக இரு அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் உட்பட அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் அனைவரும் தேறினர். ----------------- கோல்கட்டா 'டாப்' ஐ.எஸ்.எல்., தொடரின் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கோல்கட்டா அணி, 2-0 என்ற கோல் கணக்கில் வடகிழக்கு யுனைடெட் அணியை வீழ்த்தியது. இதையடுத்து 20 புள்ளிகள் பெற்ற கோல்கட்டா அணி, பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. ------------------ பட்டின்சன் விலகல் இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, சிட்னியில் 7ம் தேதி துவங்குகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பட்டின்சன், விலா பகுதியில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக விலகினார். ------------------ வில்லியம்சன் சதம் நியூசிலாந்து, பாகிஸ்தான் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 297 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 112 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement