dinamalar telegram
Advertisement

போராட்டத்துக்கு தீர்வு காண பைடன் வலியுறுத்தல்

பைடன் வெற்றிக்கு ஒப்புதல் அளிக்க அமெரிக்க பார்லிமென்ட் நேற்று கூடியது. கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்க எம்பிக்கள் திரண்டிருந்தனர். இதை தடுக்க்க பார்லிமென்ட் வளாகத்திற்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். எம்பிக்கள் பயந்து போய் மேஜைகளுக்கு கீழே பதுங்கினர். பாதுகாப்பு அதிகரிகள் விரைந்து சென்று துணை அதிபர் மைக் பென்ஸ், எம்பிக்களை பத்திரமாக வெளியே அழைத்துச் சென்றனர். பார்லிமென்ட்டை முற்றுகையிட்டது அமெரிக்க ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என ஜோ பைடன் கூறினார். பிரச்னைக்கு தீர்வு காண நாட்டு மக்களுக்கு அதிபர் ட்ரம்ப் டிவி மூலம் வேண்டுகோள் விடுக்க வேண்டும்; அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும் என பைடன் வலியுறுத்தினார். பைட் ஜோ பைடன் இதனிடையே, தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி ஆதரவாளர்களை தூண்டிவிடும் வகையில் அதிபர் ட்ரம்ப் வீடியோ வெளியிட்டதை தொடர்ந்து, அவரது ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டது. டுவிட்டர் கணக்கு 12 மணி நேரம் முடக்கப்பட்டது. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் 24 மணிநேரத்துக்கு முடக்கப்பட்டுள்ளது. தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக ட்ரம்ப் கூறும் சர்ச்சை வீடியோ ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூட்யூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement