dinamalar telegram
Advertisement

தலைவர் உள்ளிட்ட 7 நிர்வாகிகளுக்கு சிக்கல்

இந்திய செஞ்சிலுவை சங்கம் சுகாதாரம், கல்வி, நிவாரணம் என, பலவிதமான சமூக சேவைகளை செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 700 கிளைகள் மூலம் அந்தந்த பகுதிகளில் சமூக நலப் பணிகளை செய்து வருகிறது. பல தரப்பினரும் செஞ்சிலுவை சங்கத்துக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு கிளை எழும்பூரில் உள்ளது. 2011 முதல் 2020 வரையில் நிதி முறைகேடுகள் நடந்ததாக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு புகார்கள் வரப்பெற்றன. அதுபற்றி கவர்னரின் துணைச் செயலாளர் சிபிஐயிடம் புகார் செய்தார். புகார்கள் மீது விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். செஞ்சிலுவை சங்க தமிழ்நாடு கிளை தலைவர் ஹரிஷ் எல் மேத்தா, பொதுச் செயலாளர் எம்எஸ்எம் நஸ்ருத்தீன், பொருளாளர் இந்தர்நாத், முன்னாள் பொருளாளர் செந்தில்நாதன், டில்லி தலைமையக இணை செயலாளர் மணிஷ் சவுத்ரி, தமிழ்நாடு கிளை முன்னாள் தலைவர் வடிவேல் முகுந்தன் உள்ளிட்ட 7 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement