dinamalar telegram
Advertisement

ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை, எம்.உசிலம்பட்டி ஊராட்சியில், தமிழக அரசின் இலவச ஆடுகள் வழங்க 139 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். மூன்று ஆடுகள் ஒரு கிடா வழங்கப்படும் என கூறப்பட்டது. கொன்னையூர் சந்தையில் வழங்கப்பட்ட ஆடுகளை பெற பயனாளிகள் சென்றனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும், ஊராட்சி செயலர் சின்னகாளை, பணித்தள பொறுப்பாளர் முருகேசன் ஆகியோர் இரண்டாயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஆடுகளை வழங்கியுள்ளனர். ஆடுகள் சிறியதாக இருக்கிறது. எங்களுக்கு வேண்டாம் என சில பயனாளிகள் கூறியுள்ளனர். ஆடுகளை வாங்காவிட்டால், மற்ற நலத்திட்டங்களும் உங்களுக்கு கிடைக்காமல் போய்விடும். அதனால் பணத்தை கொடுத்து ஆடுகளை வாங்கி செல்லுமாறு ஊராட்சி ஊழியர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், அரசின் இலவச ஆடுகளுக்கு பணம் பெறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பணம் வசூலித்தவர்கள் மீது மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி நடவடிக்கை எடுத்தார். எம்.உசிலம்பட்டி ஊராட்சி செயலர் சின்னகாளை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பணித்தள பொறுப்பாளர் முருகேசன் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதில் சம்பந்தப்பட்ட மேலும் இருவர் மீது போலீசில் புகார் அளிக்கப்படும். இலவச ஆடுகள் வழங்கும் பணியை கண்காணிக்க தவறிய வட்டார கால்நடை மருத்துவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். பயனாளிகளுக்கு நான்கு ஆடுகள் வழங்க அரசு 10 ஆயிரம் ரூபாய் ஒதுக்கியதாகவும், அது போதுமானதாக இல்லை என்பதால், பயனாளிகள் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஆடுகளை பெற்றுச்செல்லுமாறு ஊராட்சி ஊழியர்கள் சொன்னதாக கூறப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement