dinamalar telegram
Advertisement

ராணுவ தலைமை தளபதி நரவானே நம்பிக்கை

கொரோனா பாதிப்பு, எல்லை பிரச்னை என கடந்த ஆண்டு சவால்கள் நிறைந்த ஆண்டாக இருந்தாலும், அதிலிருந்து மேல் எழும்பி வந்திருக்கிறோம். எந்த சவால்களை சந்திக்கவும் தயாராக இருக்கிறோம் என்று ராணுவ தலைமை தளபதி முகுந்த் நரவானே கூறினார். சீனா - பாகிஸ்தான் இடையே ராணும் மற்றும் ராணுவம் அல்லாத துறைகளி்ல் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் இணைந்து சக்திவாய்ந்த அச்சுறுத்தலை உருவாக்கி வருகின்றன. அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டியது அவசியம். லாடாக் எல்லையில் ராணுவ மோதல் சம்பவத்துக்கு பின், பிரச்னைக்குரிய பகுதிகளில் இரு நாடுகளும் ராணுவ பலத்தை குறைக்கவில்லை. கடந்த ஆண்டு இருந்த நிலையேதான் இப்போதும் தொடர்கிறது. இந்தியா - சீனா இடையே நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள், பரஸ்பரம் மற்றும் சம பாதுகாப்பு அடிப்படையிலான பிரச்னைகளை எடுத்துரைக்க பயன்படும். அதன் மூலம் தீர்வு காண முடியும் என்று நம்புகிறோம். பயங்கரவாதத்தை, பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரித்து வருகிறது. அதை ஒருபோதும் இந்தியா சகித்து கொள்ளாது. சரியான தருணத்தில் மற்றும் சரியான இடத்தில், பதிலடி கொடுப்பதற்கான உரிமை நமக்கு இருக்கிறது. வருங்கால சவால்களை சமாளிக்க, தொழில்நுட்ப ரீதியாக இந்திய ராணுவத்தை பலப்படுத்த வேண்டியது அவசியம். நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு ராணுவ தலைமை தளபதி நரவானே கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement