dinamalar telegram
Advertisement

கைலாசகோனா பகுதியில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்

பொங்கல் தொடர் விடுமுறையில் சுற்றுலா தளங்களில் மக்கள் அதிகம் கூடுவது வழக்கம். கானும் பொங்கல் தினத்தன்று சென்னை மெரினாவில் மட்டும் லட்சக்கனக்கான மக்கள் கூடுவார்கள். புதிய வகை கொரோனா பரவும் ஆபாயம் இருப்பதால் பொங்கல் விடுமுறை நாட்களில் மக்களை வீட்டில் அடக்கிவைக்க சுற்றுலா தளங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தில் கடற்கரை, பூங்காவில் அனுமதி மறுக்கப்பட்டதால், ஆந்திர எல்லை ஓர பகுதியில் இருக்கும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் ஆந்திராவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். சென்னையில் இருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது கைலாசகோனா அருவி. சென்னைக்கு அருகில் இருக்கும் அருவிகளில் இந்த அருவி பிரபலமானது. இங்கு காலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து குளிக்க செல்கின்றனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மினி வேன், பைக் ,கார் என வாகனங்கள் பல கிலோமீட்டர் அணிவகுத்து நிற்கிறது. இங்கு போலவே ஆந்திர எல்லையில் இருக்கும் கோவில்கள், பூங்கா என தமிழக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement