dinamalar telegram
Advertisement

வெளியூர் சென்றிருந்த நேரத்தில் துணிகரம்

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் நெய் வியாபாரி கார்த்திக். பொங்கல் பண்டிக்கைக்காக குடும்பத்துடன் பெங்களூர் சென்றிருந்தார். இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கார்த்திக்கு தகவல் தெரிவித்தனர். ரத்தினபுரி போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். வீட்டில் இருந்த நகைகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போயிருந்தன. வீட்டில் 100 பவுனுக்கு மேல் நகைகள் வைத்திருந்ததாக போலீசாரிடம் கார்த்திக் தெரிவித்துள்ளார். அவர் வெளியூரில் இருந்து வந்ததும், எவ்வளவு கொள்ளை போனது என்ற விபரங்கள் தெரியவரும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement