dinamalar telegram
Advertisement

மாநில முதல்வர்களுக்கும் போடப்படுகிறது

இந்தியாவில் தயாரான கோவிஷீல்ட், கோவேக்சின் தடுப்பூசிகளை போடும் பணி ஜனவரி 16 ம்தேதி தொடங்கியது. முதலில் டாக்டர்கள் உள்ளிட்ட 1 கோடி மருத்துவப் பணியாளர்களுக்கு போடப்படுகிறது. அவர்களைத் தொடர்ந்து போலீசார், ராணுவ வீரர்கள், துப்புரவு ஊழியர்கள் தடுப்பூசி போட அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், தடுப்பூசிக்காக பெயர் கொடுத்த மருத்துவப் பணியாளர்களே தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரவில்லை. பக்க விளைவுகள் ஏற்படும் என்ற அச்சம் முக்கியக் காரணமாக உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே மருத்துவப்பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மருத்துவப் பணியாளர்கள் தங்களது சமூக பொறுப்பை தட்டிக்கழிப்பதாகத்தான் அர்த்தம்; எதிர்காலத்தில் கொரோனா பரவல் எப்படி இருக்குமென சொல்ல முடியாது; தயவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என, மருத்துவப் பணியாளர்களுக்கு தடுப்பூசி திட்டக்குழு தலைவர் டாக்டர் வி.கே.பால் வேண்டுகோள் விடுத்தார்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement