dinamalar telegram
Advertisement

அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டார்

முதல்வன் படத்தில் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராக பதவி வகித்து, பல அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார். பரபரப்பு சினிமா காட்சி இன்று நிஜமாகியிருக்கிறது. உத்தர்காண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக கல்லூரி மாணவி ஸ்ருஸ்டி கோஸ்வாமி இன்று செயல்பட்டார். இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம். பெண் குழந்தைகளுக்கு ஊக்கமூட்டும் வகையில் இந்த யோசனைக்கு உத்தர்காண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் செயல்வடிவம் கொடுத்துள்ளார். அதன்படி, அரியானா தலைமைச் செயலகத்தில் நண்பகல் 12 மணியில் இருந்து 3 மணிவரை ஸ்ருஷ்டி முதல்வராக செயல்பட்டார். பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்துக்கு ஸ்ருஷ்டி தலைமை வகித்தார். துறைகளின் செயல்பாடுகள் குறித்து அந்தந்த துறைகளின் அதிகாரிகள் ஒருநாள் முதல்வர் முன் அறிக்கை சமர்ப்பித்தனர். கல்வி, மகளிர், குழந்தைகள் நலன், பொதுப்பணி, சமூக நலம், சுற்றுலா என 12 துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்த முதல்வர் சிருஷ்டி, தனது யோசனைகளை தெரிவித்தார். குறிப்பாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு, விவசாயிகள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் சில கருத்துக்களை சிருஷ்டி கூற, அதிகாரிகள் குறிப்பெடுத்துக் கொண்டனர். ஒரிஜினல் முதல்வர் ராவத்தும் உடனிருந்து ஸ்ருஸ்டிக்கு வழிகாட்டுதல் வழங்கினார். ஒரு நாள் முதல்வர் கவுரவத்தை பெற்ற சிருஷ்டி, ஹரித்வார் அருகே உள்ள தவுலத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர். ரூர்கியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி அக்ரி படிக்கிறார். 2018 ல் உத்தர்காண்ட் குழந்தைகள் சட்டசபையை குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நடத்தியபோது, சிருஷ்டி முதல்வராக பதவி வகித்தார். அப்போது, பள்ளியில் படித்தார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் ஒருநாள் முதல்வர் பதவிக்கு சிருஷ்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒருநாள் முதல்வர் பதவி சம்பிரதாயத்துக்காகத்தான் என்றாலும், இதை மிகப்பெரிய கவுரவமாக கருதுவதாக சிருஷ்டியின் பெற்றோர் பிரவீன், சுதா தெரிவித்தனர். இதன்மூலம், ஆண்களுக்கு நாங்கள் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்ற எண்ணம் பெண் குழந்தைகள் மனதில் ஏற்படும் என சிருஷ்டி கோஸ்வாமி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement