dinamalar telegram
Advertisement

தமிழக அரசின் அண்ணா விருது வழங்கப்படுகிறது

கடந்த ஆண்டு நவம்பர் 18 தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது வைகை எக்ஸ்பிரஸ் . காலை 7 மணி மணி அளவில் கோடைக்கானல் ரோடு ஸ்டேஷன் வழியாக ரயில் சென்ற போது பனிமூட்டமாக இருந்தது. எதுவும் தெளிவாக தெரியாத போதும், நிலச்சரிவு காரணமாக டிராக்கில் உருண்டு விழுந்து இருந்த பாறைகள் 49 வயது ரயில் ஓட்டுநர் சுரேஷ் கண்ணுக்கு தெரிந்தது. 450 மீட்டர் தூரத்தில் இதை பார்த்ததும் , 50 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த ரயிலின் வேகத்தை குறைக்க முயன்றார். எமர்ஜென்சி பிரேக் போட்டு பாறையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ரயிலை நிறுத்தி சாமர்த்தியமாக செயல்பட்டார். பாறையில் மோதி இருந்தால் நிச்சயம் விபத்து ஏற்பட்டு இருக்கும் . 1500 பயணிகளின் உயிரை காப்பாற்றிய சுரேஷை அமைச்சர் உதயகுமார் பாராட்டினார். குடியரசு தின விழாவில் சுரேஷுக்கு தமிழக அரசின் அண்ணா விருது வழங்கப்படவுள்ளது. வளைவான பாதையில் எப்படி விரைந்து ரயிலை நிறுத்தினார் என்ற அனுபவத்தை ஓட்டுநர் சுரேஷ் சொல்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement