dinamalar telegram
Advertisement

கட்சியை வைத்து காசு பார்ப்பவர்களுக்கு கல்தா

நேர்மையான அரசியல் மீது நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே என் கட்சியில் இருக்க முடியும் என்று கமல் எச்சரித்துள்ளார். பணம் சம்பாதிப்பதற்காக கட்சியில் சேர்ந்தவர்கள், உள்ளே இருந்து கொண்டே வெளியில் பேரம் பேசுபவர்களை கமல் அடையாளம் கண்டு விட்டாராம். அவர்களுக்கு கல்தா கொடுக்கத்தான், இந்த முன் அறிவிப்பு என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். குறிப்பாக, கட்சியின் திருச்சி பிரிவு மீது, உலக நாயகனுக்கு அதிருப்தி என்கின்றனர். மக்கள் நீதி மய்யம் என்பதை ஆங்கிலத்தில் சுருக்கமாக MNM என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால், திருச்சியில் மட்டும், அமைப்பு மற்றும் சார்பு அணிகளின் பொதுச்செயலாளர் முருகானந்தம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில், MMM என்றே விளம்பரப்படுத்துகிறார்களாம். அது, 'மக்கள் நீதி மய்ய முருகானந்தம்' என்பதன் சுருக்கமாம். மாவட்டத்துக்கு ஒருத்தர் இப்படி கிளம்பிவிட்டால், கட்சி என்ன ஆவது. அதனால் தான், காசு பார்க்க நினைப்பவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்று கமல்ஹாசன் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார் என்கிறார்கள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
  oce
oce - . 17-பிப்-2021 12:52 IST

மொதல்ல நீ ஆரம்பிச்ச கட்சிக்கு ஓட்டு வருதான்னு பாரு.

மேலும் 1 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement