dinamalar telegram
Advertisement

அதிமுகவில் ஒரு கலாட்டா

தலைவர்கள் வரும்போது, வரலாறு காணாத கூட்டம் வரவேற்பு கொடுக்க வேண்டும் என்பது எல்லா கட்சியிலும் எழுதப்படாத விதி. அப்படித்தான், பிரதமரை வரவேற்க பெரும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது அதிமுக மேலிடம். பத்தாயிரம் பேரை திரட்டி வர வேண்டும் என்று தென் சென்னை தெற்கு மாவட்ட செயலர் அசோக்கிற்கு உத்தரவிடப்பட்டது. அதற்கான செலவுக்காக 20 லட்சம் பெற்று கொண்டார் அவர். அந்த தொகையில் பாதியை, அசோக் அமுக்கி விட்டார் என்று இபிஎஸ், ஓபிஎஸ்க்கு புகார் போனது. அனுப்பியவர், வேளச்சேரி அதிமுக செயலாளர் மூர்த்தி. தலைக்கு 200 ரூபாய் கொடுத்து ஐந்தாயிரம் பேரை மட்டும் அழைத்து வந்துவிட்டு, மீதி பணத்தை ஆட்டைய போட்டுவிட்டார் என்பது மூர்த்தி வாதம். அசோக், மூர்த்தி இருவருக்கும் ஏழாம் பொருத்தம். துணை முதல்வர் ஆசியால் அசோக் பதவி பெற்றவர். மூர்த்திக்கு மைத்ரேயன், விருகை பாபு போன்றவர்களின் ஆதரவு இருக்கிறது. புகார் விவகாரத்தை, திமுகவின் ஐடி டீம் வரைலாக்கியதால், அதிமுக மேலிடம் டென்ஷன் ஆகிவிட்டது. மூர்த்திக்கு நெருக்கடி முற்றியது. 'என்னோட லெட்டர் பேடை திருடி, யாரோ லெட்டர் எழுதி, என் கையெழுத்த போட்டு மேல அனுப்பிருக்காங்க. போலீஸில் புகார் குடுக்க போறேன்' என்று ஒரே போடாக போட்டார் மூர்த்தி. அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே. அசோக்காவது, 20ல் பத்தை செலவு செய்திருக்கிறார். தென்சென்னை வடக்கு மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில், அதுவும் கிடையாதாம்!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement