dinamalar telegram
Advertisement

சென்னை அருகே தொண்டர்கள் அதிர்ச்சி

சில நாட்களுக்கு முன் திருப்பூர் மாவட்டத்தில் திமுக கொடியை எம்பி கனிமொழி தலைகீழாக ஏற்றினார். பக்கத்தில் இருந்தவர்கள் கனிமொழி காதில் கிசுகிசுத்ததும் உடனே கொடி இறக்கப்பட்டு மறுபடியும் ஏற்றப்பட்டது. அதே மாதிரி காமெடியை அதிமுகவினர் இன்று அரங்கேற்றியுள்ளனர். சென்னை அருகே உள்ள மீஞ்சூர் ஒன்றியத்தில் ஆலாடு கிராமத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடந்தது. பொன்னேரி அதிமுக எம்எல்ஏ சிறுனியம் பலராமன் அதிமுக கொடியை ஏற்றினார். கொடியை ஏற்றி முடித்ததும் அண்ணாந்து பார்த்த தொண்டர்கள், அண்ணாதுரை உருவம் தலைகீழாக இருப்பதை கண்டு அதிர்ந்தனர். அவசர அவசரமாக இறக்கப்பட்டு, மீண்டும் ஏற்றப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement