dinamalar telegram
Advertisement

ஆடியோ வெளியாகி மே.வங்கத்தில் பரபரப்பு

Audio :https://twitter.com/amitmalviya/status/1375694538002563077 மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிப்பதில் முதல்வர் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ்க்கும், பாஜகவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இந்த போட்டியில் மம்தா கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் கொத்து கொத்தாக பாஜகவில் இணைந்தனர். அதில் ஒருவர் சுவேந்து அதிகாரி. மம்தாவின் நெருங்கிய உதவியாளராகவும், அமைச்சராகவும் இருந்தவர். நந்திகிராம் தொகுதியில் செல்வாக்கு மிகுந்தவர் சுவேந்து அதிகாரி. பாஜக வேட்பாளராக அங்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதே தொகுதியில் மம்தாவும் களம் இறங்கியுள்ளார். மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது. இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் வெற்றி பெற செய்ய உதவுமாறு மம்தா பானர்ஜி போன் மூலம் கேட்டார் என்று, பாஜக மாவட்ட துணைத்தலைவர் பிரலாய் பால் proloy pal பரபரப்பு தகவலை வெளியிட்டார். மம்தா- பிரலாய் பால் பேசிய அந்த ஆடியோவையும் பாஜக வெளியிட்டது. அது மேற்கு வங்கம் முழுவதும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதில் இருப்பது மம்தாவின் குரல்தான் என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் கூறி வருகிறது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பி வரவேண்டும்; தேர்தலில் தமக்காக வேலை செய்ய வேண்டும் என்று மம்தா அழைத்தார். ஆனால், நான் மறுத்துவிட்டேன் என்று பிரலாய்பால் கூறியுள்ளார். சுவேந்து அதிகாரி மற்றும் அவரது குடும்பத்துடன் நீண்ட காலமாக இருக்கிறேன். இப்போது பாஜகவுக்காக உழைக்கிறேன். அவர்களுக்கு எதிராக செயல்பட்டு, துரோகம் செய்ய முடியாது. அதிகாரியின் வெற்றிக்கு பாடுபடுவேன் என்று பிரலாய் பால் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement