dinamalar telegram
Advertisement

தேர்தல் கமிஷனிடம் ராசா கேட்பு

தி.மு.க., - எம்.பி., ராசா, தேர்தல் பிரசாரத்தில், முதல்வரின் பிறப்பு குறித்து, தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அ.தி.மு.க., சார்பில், தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, அவரிடம் விளக்கம் கேட்டு, தேர்தல் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பியது. அதற்கு அவர் அளித்துள்ள பதிலில், என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுக்கிறேன். ஒருபோதும் பெண்மையையும், தாய்மையையும் இழிவாகப் பேசியதில்லை. நான் முதல்வரை தரக்குறைவாகப் பேசியதாக, அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் தவறாக பிரசாரம் செய்கின்றன. இது குறித்து, மார்ச், 27ல், பெரம்பலுாரில் பத்திரிகையாளர்களை சந்தித்து, விளக்கம் அளித்தேன்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement