dinamalar telegram
Advertisement

தேர்தல் விதியை மீறி பிரசாரம்

முசிறி தொகுதியில் அமமுக மற்றும் தேமுதிக கூட்டணி கட்சியின் சார்பில் திருச்சி வடக்கு மாவட்ட தேமுதி்க செயலாளர் கே.எஸ். குமார் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய விஜயகாந்த் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இருகட்சி தொண்டர்களும் முசிறி கைகாட்டியில் இரவு 7 மணி முதல் திரண்டனர். ஆனால் மணப்பாறையில் இரவு 9. 25 க்கு நிகழ்ச்சியை முடித்து புறப்பட்ட விஜயகாந்த் முசிறிக்கு இரவு10.30 மணிக்கு வந்தார். அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் திறந்த வேனில் இருந்தபடி இரு கைகளையும் உயர்த்தி முரசு சின்னத்தை காட்டினார். இதனைப் பார்த்த தொண்டர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர். பின்னர் விஜயகாந்த் புறப்பட்டார். இரவு10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது என்று நிலையில் ஒலி ஒளி அமைப்பாளரிடம் சென்று தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் பாட்டை போடும்படி மிரட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement