dinamalar telegram
Advertisement

கவர்னர் தமிழிசை பேட்டி

புதுச்சேரியில் தனியார் மருத்துவ கல்லூரி சார்பில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார். முகாமில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கவர்னர் தமிழிசை, புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தை சேர்ந்தவர்களும் புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். தற்போது கொரோனா பரவல் உயர்ந்துள்ளது. ஆனால், ஊரடங்கு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை அதற்கான தேவை தற்போதைக்கு இல்லை என தமிழிசை தெரிவித்துள்ளார். ஹெல்மட் அபராதம் குறித்து தான் எந்தவித உத்தரவையும் தான் பிறப்பிக்கவில்லை என்றும், பொதுமக்கள் முககவசம் மற்றும் தலைகவசம் அனிய வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement