dinamalar telegram
Advertisement

தேஷ்முக் வழக்கு சி.பி.ஐ., விசாரணை துவங்கியது

மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சராக இருந்த, தேசியவாத காங்., மூத்த தலைவர் அனில் தேஷ்முக் மீது, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங், பல ஊழல் புகார்களை கூறினார். இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இந்நிலையில், தேஷ்முக் மீதான புகார்கள் குறித்த முதல்கட்ட விசாரணையை, சி.பி.ஐ., நேற்று துவக்கியது. டில்லியில் இருந்து வந்த, சி.பி.ஐ., அதிகாரிகள், பரம்வீர் சிங், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள, போலீஸ் இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸே உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். உதவி போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாட்டில், துணை கமிஷனர் ராஜு புஜ்பல் ஆகியோரிடமும், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement