dinamalar telegram
Advertisement

திட்டமிட்டபடி மே 3 முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு?

பிளஸ் 2 செய்முறை தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது. அதில், ஆய்வகங்களில் ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்தே வைத்திருத்தல், மாணவர்களின் செய்முறை தேர்வுக்கு முன்பும், பின்பும் அறைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல் உள்ளிட்ட வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறி உள்ளவர்களுக்கு, முழுமையாக குணமடைந்தபின் வேறொரு நாளில் செய்முறை தேர்வு நடத்தலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது. இந்நிலையில், தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலால், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்குமா என சந்தேகம் எழுந்தது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில், பிளஸ் 2 செய்முறை தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டதால் பொதுத்தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆயத்தமாக உள்ளது என்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி மே 3-ம் தேதி முதல் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement