dinamalar telegram
Advertisement

தஞ்சையில் டாக்டர் மீது தாக்குதல்

தஞ்சை மேல வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று இரவு விபத்தில் காயமடைந்துள்ளார். அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பணியில் இருந்த பயிற்சி டாக்டரிடம் சிகிச்சை அளிக்க கூறியுள்ளனர். அப்போது டாக்டருக்கும் வாலிபரின் உறவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. வாலிபரின் உறவினர்கள் பயிற்சி டாக்டரை நாற்காலியை கொண்டு தாக்கி, அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் டாக்டர்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய் கோட்டாட்சியர் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தி மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்றதையொட்டி போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். மருத்துவரை தாக்கிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (3)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)
ஆரூர் ரங்
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா . 10-ஏப்-2021 17:35 IST

இதுக்குதான் .நீட் எல்லாம் வேண்டாம்னு சொல்றது😆 கஷ்டப்பட்டு படித்து அடி வாங்குவதற்கு பதில் ஒரு தேர்வுமே எழுதாமல் ஓசி பாஸ் டாக்டராகி 😝அடி வாங்கலாமே.

மேலும் 2 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement